Thursday 2nd of May 2024 06:08:27 AM GMT

LANGUAGE - TAMIL
-
கனேடிய தமிழ் சமூக மைய செயற்றிட்டம்  மத்திய, மாகாண அரசுகளால் அங்கீகரிப்பு! (காணொளி)

கனேடிய தமிழ் சமூக மைய செயற்றிட்டம் மத்திய, மாகாண அரசுகளால் அங்கீகரிப்பு! (காணொளி)


கனடாவில் உட்கட்டுமான முதலிடல் திட்டத்தினூடாக நிதி பெறுவதற்கென மத்திய மாகாண அரசுகளால் தமிழ் சமூக மைய செயற்றிட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் மூலம் இந்தச் செயற்றிட்டத்தின் கட்டுமாணத்திற்குத் தேவையான 26.3 மில்லியன் டொலர்களை மத்திய, மாநில அரசுகள் வழங்கும்.

கனேடிய தமிழர்களுக்கு சமூக மையம் அமைப்பதற்கான சிறப்பு அறிவித்தல் இன்று சற்று முன்னர் இடம்பெற்ற நிகழ்வில் வெளியிடப்பட்டது. கனடிய தமிழர்களின் வரலாற்றில் முக்கிய அறிவித்தலாக இது அமைந்தது.

கனேடிய துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான கிறிஸ்டியா ஃப்ரீலாண்ட் (Chrystia Freeland), ஒன்ராறியோ மாகாண முதல்வர் டக் போர்ட் (Doug Ford) , ரொரண்டோ நகர முதல்வர் ஜோன் டோரி (John Tory) உள்ளிட்ட கனேடிய அரசியல் அரசியல் தலைவர்கள் இணைந்து இந்த அறிவிப்பை வெளியிட்டனர்.

அத்துடன், கனேடிய தமிழ் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி, ஒன்ராறியோ மாகாண சபை உறுப்பினர்களான விஜய் தணிகாசலம், லோகன் கணபதி ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

தமிழ்ச் சமூக மையத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

ரொரண்டோ நகரசபையின் நில-ஆதனப் பகுதியின் (City of Toronto’s real estate division) ரொரண்டோ நகரவாக்கச் சபை (Create TO), 311 ஸ்ரெயின்ஸ் பகுதியில் தமிழ்ச் சமூக மையம் அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கனடா, ஒன்ராறியோ, ரொறன்ரோ



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE